நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக சிட்னி நகரின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 01 மணியளவில் சில இடங்களில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரியாக இருக்கும் என்றும், பிற்பகலில் சற்று குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் 04 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று அதிக வெப்பமான நாள் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடிலெய்டு – ஹோபார்ட் மற்றும் மெல்போர்ன் நகரங்களும் இன்றும் நாளையும் வெப்பமான வானிலையை எதிர்பார்க்கலாம்.
வரும் திங்கட்கிழமைக்குள் இந்த நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.