உயர்நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், விடுதலை செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளில் குற்றச் சாட்டு சுமத்தப்பட்ட 6வது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெல்போர்னில் 36 வயதான எரித்திரியன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்படும் போது அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை அவர் சரியாகப் பின்பற்றத் தவறியதாகக் கூறப்படுகிறது.
மத்திய அரசு சமீபத்தில் ஏற்றுக்கொண்ட சட்டங்களின்படி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 93,900 டாலர் அபராதமும் விதிக்கப்படும்.