Newsபெண்ணின் கண்களில் வாழும் 60க்கும் மேற்பட்ட உயிருள்ள புழுக்கள்

பெண்ணின் கண்களில் வாழும் 60க்கும் மேற்பட்ட உயிருள்ள புழுக்கள்

-

சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சிடையந்த பெண், உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள வைத்தியசாலையை அணுகியுள்ளார்.

பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், அவரது வலது கண்ணில் இருந்து 40க்கும் மேற்பட்ட புழுக்களையும் இடது கண்ணில் இருந்து 10க்கும் மேற்பட்ட புழுக்களையும் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளனர். மொத்தத்தில், மருத்துவர்கள் அந்த பெண்ணின் கண்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ஒட்டுண்ணிகளை அகற்றியதாக பெண் மிரர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக ஈ கடித்தால் பரவும் ஃபிலாரியோடியா வகையைச் சேர்ந்த வட்டப்புழுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும், நாய்கள் மற்றும் பூனைகளிடமிருந்து புழுக்களை தொற்றியிருக்க வாய்ப்புள்ளதாக அந்த பெண் கருதுகிறார். அவற்றின் உடலில் தொற்று லார்வாக்கள் இருக்க வாய்ப்புள்ளது. விலங்குகளைத் தொடுவதும், கண்களைத் தேய்ப்பதும் தொற்றுக்கு வழிவகுத்திருக்கலாம் என்று மிரர் கூறியுள்ளார்.

எஞ்சியிருக்கும் லார்வாக்களின் சாத்தியக்கூறுகளை கண்காணிக்க அடிக்கடி பரிசோதனைக்கு உட்படுத்தும்படி மருத்துவர்கள் குறித்த பெண்ணை வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...