குயின்ஸ்லாந்து பிரதமர் பதவியில் இருந்து அனஸ்டாசியா பலாஷே ராஜினாமா செய்துள்ளார்.
08 வருடங்களுக்கும் மேலாக அந்தப் பதவியில் பணியாற்றினார்.
சமீபகாலமாக பிரதமர் மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதுடன், பொது நிதியை தவறாக பயன்படுத்தியதும் அதில் அடங்கும்.
குயின்ஸ்லாந்து மாநில தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதால் அங்கும் தற்போதைய பிரதமர் தோற்கடிக்கப்படுவார் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, குயின்ஸ்லாந்தின் பிரதமருக்கு ஜூன் 2025 வரை 03 சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஒரு முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்படி, நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது மாநிலப் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.