நெட்பால் ஆஸ்திரேலியா மற்றும் மகளிர் சங்கம் இடையேயான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
இரு தரப்பும் சுமார் பத்து மாதங்கள் கலந்துரையாடியதாக நெட்பால் ஆஸ்திரேலியா கூறுகிறது.
இரு தரப்பினரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளனர்.
புதிய ஒப்பந்தத்தின்படி வலைப்பந்து வீரர்களின் சம்பளத்தை பதினொரு சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த சம்பள உயர்வு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
புதிய திட்டத்தில் இருபது சதவீத ஸ்பான்சர்ஷிப் நிதியை வீரர்களுக்கு வழங்குவதும் அடங்கும்.
ஆஸ்திரேலியா நெட்பால் தலைமை நிர்வாகி கெல்லி ரியான் நேற்று பதவி விலகினார். அதன் பின்னரே இந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.