Newsகடற்கரை மணலில் புதைக்கப்பட்டு மரணமடைந்த ஆஸ்திரேலிய இளைஞர்.

கடற்கரை மணலில் புதைக்கப்பட்டு மரணமடைந்த ஆஸ்திரேலிய இளைஞர்.

-

அவுஸ்திரேலியாவில் கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட நிலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குயின்ஸ்லாந்தின் பிரிபி தீவு பகுதியில் கடந்த சனிக்கிழமை ஜோஷ் டெய்லர் என்பவரே மணலில் புதையுண்டு மரணமடைந்தவர்.

அதிகாரிகள் முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையில், பன்றி மாமிசம் சமைக்க தோண்டப்பட்ட குழி அது என தெரியவந்துள்ளது. இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவிக்குழுவினர் ஹெலிகொப்டர் வசதியை பயன்படுத்தி, இளைஞரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால், காயங்கள் காரணமாக இளைஞர் ஜோஷ் டெய்லர் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவயிடத்தில் பல எண்ணிக்கையிலான மக்கள் காணப்பட்டதாகவும், அவர்களிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக குயின்ஸ்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரிஸ்பேனுக்கு வடக்கே 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரபலமான பிரிபி தீவு. சம்பவத்தின் போது டெய்லரின் நண்பர்களும் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சுமார் 15 பேர்கள் கடுமையாக போராடி அந்த குழியில் இருந்து டெய்லரை மீட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் வனப்பகுதி அதிகாரிகளில் சிலர் முதலுதவி அளித்துள்ளனர். தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவயிடத்திற்கு வந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த டெய்லரின் உயிர் காக்கும் கருவிகளை வியாழக்கிழமை நீக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

குழிக்குள் விழுந்ததால் ஏற்பட்ட காயங்களில் இருந்து அவர் மீண்டு வருவது கடினமான ஒன்றாக இருக்கும் என்றே மருத்துவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுவதாகவும், இதுவரை 42,000 அமெரிக்க டொலர் வரையில் உதவி கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Latest news

விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க புதிய வழி

விக்டோரியா மாநிலத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் புதிய முறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. விக்டோரியாவில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆன்லைனில் $85,000 வரை...

கிறிஸ்துமஸ் நேரத்தில் ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான புதிய வேலைகள்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் 4.2 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த மாதம் மட்டும் சுமார் 65,000...

விக்டோரியாவில் இன்று இடியுடன் கூடிய மழை மற்றும் பனி பொழியும்

இன்று விக்டோரியாவில் இடியுடன் கூடிய மழை மற்றும் பனி முன்னறிவிப்பு விக்டோரியாவில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம்...

இன்று ஆஸ்திரேலியா வந்துள்ள மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா

மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா இன்று ஆஸ்திரேலியா வந்துள்ளனர். முடிசூட்டு விழாவுக்குப் பிறகு அவர்களின் முதல் பெரிய வெளிநாட்டுப் பயணம் இதுவாகும், மேலும் அரச...

புதிய விண்வெளி பயணத்திற்கு தயாராகும் தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கூனிபா சோதனை மைதானத்தில் இருந்து முதல் விண்வெளி ராக்கெட்டை ஏவுவதற்கான ஒப்பந்தத்தில் சதர்ன் லாஞ்ச் கையெழுத்திட்டுள்ளது. உத்தேச புதிய திட்டம் குறித்து மத்திய...

சிட்னி துறைமுக பாலத்தில் ஏற்பட்ட பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு

சிட்னி துறைமுக பாலத்தில் சிறிது நேரத்திற்கு முன் வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். பிற்பகல் 1.40 மணியளவில் மூன்று கார்களும் பஸ்ஸொன்றும் மோதிக்கொண்டதில் இந்த...