Newsவிசா விதிமுறைகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

விசா விதிமுறைகளை கடுமையாக்கும் அவுஸ்திரேலியா

-

அவுஸ்திரேலியாவில், வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் குறைந்த திறன் உடைய பணியாளர்களுக்கான, ‘விசா’ வழங்கும் விதிமுறைகளை கடுமையாக்க, அந்நாடு முடிவு செய்துள்ளது.

பல்வேறு நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கான மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வருகின்றனர். இதனால் அந்நாட்டு உட்கட்டமைப்பு வசதிகளில் பல சிக்கல்கள் எழுந்ததாக கூறப்படுகிறது.

கடந்த, 2022 – 23ம் ஆண்டு, ஐந்து லட்சத்து 10 ஆயிரம் பேர் அவுஸ்திரேலியாவில் குடியேறியதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இதை தொடர்ந்து, வெளிநாட்டினரின் குடியேற்றத்தை குறைக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இது குறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சர் கிளார் ஓ நெய்ல் கூறியதாவது:

அவுஸ்திரேலியாவில், வெளிநாட்டினர் குடியேறுவதை கணிசமாக குறைக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அது சிறப்பான பலன்களை அளித்து வருகிறது. கடந்த 2022 – 23ல் குடியேற்ற எண்ணிக்கை கடுமையாக அதிகரித்ததற்கு வெளிநாட்டு மாணவர்களின் வருகையே காரணமாக அமைந்துள்ளது.

எனவே, மாணவர்களுக்கான தேர்வில் ஆங்கில பாடத்தின் தகுதி மதிப்பெண்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திறன் குறைந்த பணியாளர்களின் விசா விதிமுறைகளையும் கடுமையாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

வான்வெளியை மூடிய ஈரான் – 2,500 போராட்டக்காரர்கள் பலி

ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருவதால், நாட்டின் வான்வெளி தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் விமானப் போக்குவரத்து...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

இந்த வாரம் சிட்னியில் போலீஸ் பலத்த பாதுகாப்பு

சிட்னியில் போராட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்தாலும், இந்த வாரம் போராட்டங்களை நடத்த ஆர்வலர்கள் குழு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, நீண்ட கை துப்பாக்கிகளை ஏந்தி, நகருக்கு...

விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் கடந்த வாரம் நீடித்த கடுமையான வெப்பமான வானிலை முடிவுக்கு வந்து, வானிலை முறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய...