Cinemaநடிகரும் இயக்குநருமான சங்கரன் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான சங்கரன் காலமானார்!

-

நடிகரும் இயக்குநருமான ரா.சங்கரன் (92) உடல் நலக்குறைவால் இன்று (14) சென்னையில் காலமானார்.

1974இல் ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தேன் சிந்துதே வானம் , துர்கா தேவி, தூண்டில் மீன் உள்ளிட்ட 8 படங்களை இயக்கியுள்ளார்.

பொண்டாட்டி தேவை, தாயம்மா, மௌன ராகம், சின்ன கவுண்டர், அமராவதி, சதி லீலாவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக, மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மௌனராகம் படத்தில் நடிகை ரேவதியின் அப்பாவாக சந்திரமௌலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நாயகனான கார்த்தி, ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என அவரைக் கூப்பிடும் காட்சி மிகப் பிரபலம்.

சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர் இன்று காலமானார். அவரின் மறைவுக்கு தமிழ்த் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...