நியூ சவுத் வேல்ஸ் மக்கள் தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் பென்னி ஷார்ப் கேட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது.
இன்று பிற்பகல் சிட்னியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெப்பநிலை நாற்பது டிகிரி செல்சியஸைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் மின் தேவை அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது.
எனவே அத்தியாவசியமற்ற பல்வேறு மின்சாதனங்களை பயன்படுத்துவதை நிறுத்துமாறு அமைச்சர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் குளிரூட்டிகளை இருபத்தி நான்கு டிகிரி செல்சியஸுக்கு மேல் வைக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தேவை அதிகரிப்பால் ஏற்படக்கூடிய நெருக்கடியைக் குறைப்பதே இந்தக் கோரிக்கையின் நோக்கமாகும்.