ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் ஆணையம், தயாரிப்பு பிரச்சனைகள் காரணமாக சந்தையில் இருந்து Lenovo பவர் பேங்க்களை அகற்ற தலையிட்டுள்ளது.
கடந்த மே 12 முதல் ஜூலை 08 வரை வெளியிடப்பட்ட 20000 மில்லியம்பியர் திறன் கொண்ட பவர் பேங்கை லெனோவா திரும்பப் பெற வேண்டியுள்ளது.
உற்பத்தி பிரச்சனையால் பவர் பேங்க் வெடிக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, பவர் பேங்க்களை கலெக்ஷன் பாயின்ட்டுகளுக்கு மட்டுமே திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் கூறுகிறது.
அவற்றை வேறு வழிகளில் அப்புறப்படுத்துவது பொருத்தமற்றது எனவும் பவர் பேங்க் வெடிப்பதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.