Newsமக்களிடம் மன்னிப்பு கோரிய ரஷ்ய ஜனாதிபதி

மக்களிடம் மன்னிப்பு கோரிய ரஷ்ய ஜனாதிபதி

-

ரஷ்யாவில் இந்த ஆண்டு 8 சதவீதமாக பணவீக்கம் உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய பிறகு முட்டையின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் பல்வேறு தடைகள் விதித்துள்ளதால் முட்டை உற்பத்தியாளர்கள் கோழி தீவனம் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும், இறக்குமதி வரியை உயர்த்தியதும் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி வரியை 1.2 பில்லியன் முட்டைகளுக்கான இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க இருப்பதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக உரையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் முதியவர் ஒருவர், முட்டை விலை மற்றும் கோழி இறைச்சி விலை அதிவேகத்தில் உயர்ந்துள்ளதாக தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

இதற்கு புடின், “நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் இது அரசாங்க பணியின் தோல்வி. எதிர்காலத்தில் இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு சூழ்நிலை சரியாகும் என நான் உறுதியளிக்கிறேன்” என்றுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...