Newsதமது பணயக்கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம்

தமது பணயக்கைதிகளையே சுட்டுக்கொன்ற இஸ்ரேல் இராணுவம்

-

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் தீவிரம் அடைந்துள்ளது.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்து கட்டும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

இந்த நிலையில், இஸ்ரேல் படைகள் தவறுதலாக பணயக்கைதிகளை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், “காசா முனையில் இஸ்ரேலிய படைகள் பணயக்கைதிளை பார்த்து இருக்கிறார்கள்.

அவர்கள் அச்சுறுத்தல்காரர்கள் என தவறுதலாக நினைத்து மூன்று பணயக்கைதிகளை கொலை செய்து விட்டனர்” எனத் தெரிவித்துள்ளார். பணயக்கைதிகளை இஸ்ரேல் இராணுவமே கொன்றது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், பணயக்கைதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தாங்க முடியாத சோகம் என்றார். மேலும், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனவும் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய சபையில் புர்கா அணிந்து வந்த தலைவரால் பரபரப்பு

ஆஸ்திரேலிய செனட் சபையில் பெண் தலைவர் புர்கா அணிந்து வந்தது சீற்றத்தைத் தூண்டியது. One Nation தலைவர் பவுலின் ஹான்சன், செனட் சபைக்கு கருப்பு புர்கா மற்றும்...

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...

சமூக ஊடகத் தடையை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்ற இளைஞர்கள்

சமூக ஊடகத் தடையை எதிர்த்து இளம் ஆஸ்திரேலியர்கள் குழு ஒன்று உயர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளது. இந்தத் தடை இளைஞர்களின் அரசியல் தொடர்பு சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துகிறது என்று...

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

ஹொங்கொங்கில் பாரிய தீ விபத்து – 13 பேர் உயிரிழப்பு

ஹாங்காங்கில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தின் பல உயரமான கோபுரங்களில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் இடிபாடுகளில்...

மொபைல் போனில் இருந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான ஒரு வழி

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் இளைஞர்களுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்கள் மட்டுமே தங்கள் மொபைல் போனிலிருந்து...