தொடர் மழை காரணமாக குயின்ஸ்லாந்தின் வடக்குப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியதால், குடியிருப்புவாசிகளை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல நெடுஞ்சாலைகள் தண்ணீரில் மூழ்கி சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆறு மணித்தியாலங்களில் சில பிரதேசங்களில் 400 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இருபத்தி நான்கு மணி நேரத்தில் பெய்த மழை மூன்றடியை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெய்ர்ன்ஸ் விமான நிலையத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சில நாட்களில் இரண்டாவது முறையாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மற்றும் சில விமானங்களும் நீரில் மூழ்கியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.