பலஸ்தீன உதவி ஆதரவாளர்கள் பல ஊடகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மெல்போர்னில் உள்ள “The Age”, “Nine Melbourne” மற்றும் Australian Financial Review அலுவலகங்களுக்கு முன்பாக போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
ஊடகங்களின் மௌனமே வன்முறை அதிகரிப்பதற்குக் காரணம் என்றார்கள்.
அவுஸ்திரேலிய ஊடகங்கள் பாலஸ்தீனம் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது பக்கச்சார்பற்ற, நியாயமான, மறைக்கப்படாத அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவுஸ்திரேலிய ஊடகங்கள் இஸ்ரேலின் தேவைகளின் அடிப்படையில் தகவல்களை தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமென “Free Palestine Melbourne” அமைப்பு டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
போராட்டக்காரர்களிடம் விக்டோரியா போலீசார் வந்த போதிலும் அவர்கள் தலையிடவில்லை என்று கூறப்படுகிறது.