Newsலண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்

லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இந்திய இளைஞர்

-

லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது உறவினர் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக லண்டன் வந்திருந்த குரஷ்மான் சிங் (Gurashman Singh Bhatia, 23), கடந்த வியாழக்கிழமை, அதாவது, டிசம்பர் 14ஆம் திகதி, நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

மறுநாள், அதாவது, டிசம்பர் 15ஆம் திகதி அதிகாலை 4.20 மணிக்கு லண்டனிலுள்ள South Quay என்னுமிடத்திலுள்ள CCTV ஒன்றில் சிங் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

சிங் அறைக்குத் திரும்பாததால், காலை 5.48 மணிக்கு, அது குறித்து பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

இதற்கிடையில், டிசம்பர் 20ஆம் திகதி, மதியம், South Quayயிலுள்ள நதி ஒன்றிலிருந்து சிங்கின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட, இந்திய ஊடகங்கள் வித்தியாசமான செய்திகளை வெளியிட்டன. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், நேற்று, அதாவது, 21.12.2023 அன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிங்கின் குடும்பத்தினர், சிங் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளை மறுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலிருக்கும் சிங்கின் சகோதரர் ஒருவரும் நாங்கள் இன்னமும் சிங்கை தேடிக்கொண்டிருக்கிறோம், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை என்று கூற, குழப்பமான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள பிரைட்டனில் வாழும் சிங்கின் உறவினரான Irendeep Brown என்னும் பெண்மணி, சிங் மரணம் தொடர்பாக சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

நதியோரமாக நடந்து சென்ற சிங், தண்ணீரில் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ள Irendeep, அது ஒரு விபத்து என்றும், சிங்குக்கு நீச்சல் தெரியாது, உறையவைக்கும் குளிர்ந்த நீரில் விழுந்த அவர் உயிரிழந்திருக்கலாம், அது விபத்தேயொழிய, தற்கொலையோ, இனவெறித்தாக்குதலோ அல்ல என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில்,சிங்குடைய ATM அட்டையை யாரோ பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Latest news

Virgin Australia-வில் செல்லப்பிராணிகளை கொண்டு வர $150 டிக்கெட்

Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

மெல்பேர்ண் தீ விபத்தில் இரு இளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் மீது குற்றம்

மெல்பேர்ணில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...