குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அடுத்த வருடம் நிவாரணம் வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் Anthony Albanese தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவைக் குறைப்பது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும்.
எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டு வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல காரணங்களால் ஆஸ்திரேலிய மக்களின் பொருளாதார நிலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி விகிதங்கள் அதிகரிப்பு மற்றும் வருமான வரி அதிகரிப்பு ஆகியவை இதற்கு காரணமாக உள்ளன.
பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் சம்பளம் அதிகரித்தாலும் போதாது என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுபோன்ற பல நெருக்கடிகளின் கீழ் அடுத்த ஆண்டு அதிகபட்ச நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் குறிப்பிடுகிறார்.