விக்டோரியாவில் கடையில் திருட்டு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உணவு மற்றும் உடைகள் திருடப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது என்று குற்றப் புள்ளியியல் நிறுவனம் கூறுகிறது.
தற்போதைய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என நம்பப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான பன்னிரெண்டு மாதங்களில் ஏறக்குறைய இருபத்து மூவாயிரம் கடைத் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சில்லறை விற்பனை கடைகள், சேவை செய்யும் இடங்கள், உணவு விற்பனை நிலையங்கள் போன்றவற்றிலும் பல திருட்டுகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
திருட்டுகளால் வணிக நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.