மோட்டார் சைக்கிள் விபத்துக்களின் எண்ணிக்கை கவனத்திற்குரியது என்று ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
73 வயதான மெல்போர்ன் நபர் ஒருவர் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்து ஏற்படும் போது அவர் பாதுகாப்பு ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் இருநூற்றி ஐம்பத்தாறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராயல் மெல்போர்ன் மருத்துவமனை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் மின்சார ஸ்கூட்டர்களினால் விபத்துக்குள்ளானதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் காயமடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதற்கு செலவிடப்பட்ட தொகை இரண்டு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை அண்மித்துள்ளதாக அவர்கள் காட்டியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்துக்களை குறைக்க கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.