ஆஸ்திரேலியாவிற்கு அருகே கடலில் மூழ்கிய சில எரிமலைகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
கடலுக்கு அடியில் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உயர் தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்படுகிறது.
இதற்கு சர்வதேச ஆதரவு கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
3டி தொழில்நுட்பத்தின் மூலம் கடற்பரப்பை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை வெளிவராத எரிமலை அமைப்பு டாஸ்மேனியா முதல் அண்டார்டிகா வரையிலான பகுதியில் பரவி இருப்பதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சில எரிமலைகள் சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் உள்ளதாகவும், எரிமலை அமைப்பு செயல்படாமல் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.