ஆஸ்திரேலியாவில் உணவு தட்டுப்பாடு மற்றும் தற்காலிக உணவு விலை உயர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்துள்ளமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு குயின்ஸ்லாந்தில் சுமார் 70 சதவீத சாகுபடி நிலங்கள் சேதமடைந்துள்ளன.
சில வீதிகள் இன்னும் நீரில் மூழ்கியிருப்பதால் விவசாயம் செய்யப்பட்டுள்ள வயல்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரங்கள் காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என்றும், தற்காலிக விலை உயர்வு இருக்கும் என்றும் குயின்ஸ்லாந்து விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.