Newsஇந்தியாவில் சடுதியாக அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

இந்தியாவில் சடுதியாக அதிகரிக்கும் புதிய வகை கொரோனா!

-

ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் புதிய வகையான ‘ஜெ.என்.1’ தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வரும் நிலையில் இந்தியாவில் கேரளாவைச் சோ்ந்த பெண்ணுக்கு இத்தொற்று அண்மையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் இதுவரை 23 பேருக்கு ‘ஜெ.என். 1’ வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா பரவல் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, உரிய பொது சுகாதார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 656 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோா் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்தில் தள்ளுபடி விலையில் உணவு வழங்க புதிய செயலி

குயின்ஸ்லாந்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் உணவக உணவுகள் மற்றும் கஃபே சிற்றுண்டிகளை வழங்க புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. "Too Good to Go", வணிகங்கள் நாளின்...

திரும்பப் பெறப்பட்ட ஒரு வகையான Elbow Wrap

ஒரு வகையான Elbow Wrap-ஐ பயன்படுத்திய ஒரு வாடிக்கையாளர் காயமடைந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து, குறித்த Elbow Wrap அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. அதன்படி, ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...

கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு விதிக்கப்பட்ட $40,000 அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாக உணவு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஒரு பிரபலமான...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை விதித்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து,...

கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு விதிக்கப்பட்ட $40,000 அபராதம்

உணவுப் பாதுகாப்பு தொடர்பான பல குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோல்ட் கோஸ்ட் பேக்கரிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏழு மாதங்களாக உணவு உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஒரு பிரபலமான...

வாக்குப் பெட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற சிட்னி தேர்தல் ஊழியர்

சிட்னி தேர்தல் ஊழியரின் வீட்டில், கூட்டாட்சித் தேர்தலில் காணாமல் போன கிட்டத்தட்ட 2,000 வாக்குச் சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நியூ சவுத் வேல்ஸின் பார்ட்டனில் வாக்குகள் ஏற்கனவே எண்ணப்பட்டுவிட்டதால்,...