Newsஉயர்ந்து வரும் உலகின் சராசரி வெப்பநிலை

உயர்ந்து வரும் உலகின் சராசரி வெப்பநிலை

-

2023ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம்1.5 ° செல்சியஸாக இருக்க 99% வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.

உலக வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டாக 2023 அறியப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு மையம் (WMO) அறிவித்துள்ளது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஐ.நா. காலநிலை பாதுகாப்பு இயக்கங்கள், சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் வலுத்துள்ள நிலையில், 2023-ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 ° செல்சியஸாக இருக்கும் என்ற கணிப்பு கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்னொரு அதிர்ச்சியாக 2023ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பம் 1.5 ° செல்சியஸாக இருக்க 99 சதவீத வாய்ப்புள்ளதாக இன்னொரு அறிக்கை வெளியாகியுள்ளது. இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் வரையறுக்கப்பட்டு, அந்த ஒப்பந்தமானது 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கையெழுத்தானது. பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் 175 நாடுகள் கையெழுத்திட்டன.

உலக வெப்பநிலை உயர்வை 2 டிகிரி செல்சியஸுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே பாரீஸ் ஒப்பந்தத்தின் முக்கிய இலக்காக அமைந்துள்ளது. ஆனால், ஒக்டோபர் 2023ன் முடிவடைந்த காலத்தில் எடுக்கப்பட்ட கணக்கின்படி சர்வதேச சராசரி வெப்பம் 1.4 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் சராசரி வெப்பம் 1.5 °c செல்சியஸாக இருக்கும் என கணித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...