ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸின் அறிக்கைகள் முரண்பாடானவை என்று ஆஸ்திரேலியாவுக்கான இஸ்ரேல் தூதர் அமீர் மேமன் தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதில் இருந்து ஹமாஸ் அகற்றப்பட வேண்டும் என்று குறிப்பிடும் அல்பானீஸ், மத்திய கிழக்கில் போர் நிறுத்தம் குறித்தும் கருத்து தெரிவிக்கிறார் என்று அவர் கூறுகிறார்.
அது முரண்பாடானது என தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள இஸ்ரேலியர்களின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பாலஸ்தீனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த எந்தத் தயார்நிலையும் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையின் பின்னர், அவுஸ்திரேலியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் Anthony Albanese இன் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.