அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் சிட்னி விமான நிலையத்திற்குள் நீர் புகுந்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 24ம் திகதி இரவில் சிட்னி நகரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சிட்னி விமான நிலையத்தில் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அந்த நாட்டின் விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதனால் சிட்னி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் வெளி மாகாணங்களுக்கும் புறப்படத் தயாராக இருந்த 23 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஓடுதளத்தில் தண்ணீரில் மூழ்கியபடி அவை விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிட்னிக்கு வர முயன்ற 20க்கும் மேற்பட்ட விமானங்கள் பிரிஸ்பேன், மெல்போர்ன் நகர் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட சிட்னிக்கு வர இருந்தவர்கள கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.