Cinemaநடிகர் விஜயகாந்த் காலமானார் !

நடிகர் விஜயகாந்த் காலமானார் !

-

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் காலமானார்.

சுகயீனமுற்றிருந்த அவர் கொரோனா தொற்றுக்குள்ளானதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை மியாட் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதியானது

மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டபோதிலும் அது பலனளிக்கவில்லை

விஜயகாந்த் பயோடேட்டா

விஜயகாந்த் – ‘நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி’ என்ற இயற்பெயர் கொண்ட இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்பட்டார் . இவர் தமிழ் திரையுலக பிரபல முன்னணி முக்கிய நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழக சட்டசபை அரசியல்வாதியும் ஆவார். விஜயகாந்த் 1979 ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015 ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர்.

விஜயகாந்த் இதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இவரது திரைப்படங்கள் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருந்தாலும் இவர் தமிழ் சினிமாவில் தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள குறிப்பிடப்படும் பிரபலங்களில் இவரும் ஒருவராவார். இவருக்கு தமிழ் சினிமாவில் “புரட்சிக் கலைஞர்’ என்னும் பட்டம் உண்டு.

பிறப்பு

விஜயகாந்த், மதுரையில் கே.என் அழகர்சுவாமி மற்றும் ஆண்டாள் அழகர்சுவாமி ஆகியோருக்கு மகனாக 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் பிறந்துள்ளார். நடிப்பு கலையில் அதிக ஆர்வம் கொண்டுள்ள இவர், சினிமாவில் நடிகன் ஆக வேண்டும் என்ற மோகத்தில் சென்னைக்கு வந்து பல கஷ்டங்களை கடந்து 1979 ஆம் ஆண்டு ‘அகல் விளக்கு’ என்ற படத்தில் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ல் நடிகர் விஜயகாந்த், பிரேமலதா என்பவரை மதுரையில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சன்முகப் பாண்டியன் என்னும் இரு மகன்கள் உள்ளனர். இவர்களது இளைய மகன் ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் ஒரு நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

திரையுலக தொடக்கம்

நடிகர் விஜயகாந்த் பல போராட்டங்களுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார். இவர் 1979ல் அகல் விளக்கு என்ற படத்தில் நடித்துள்ளார், பின்னர் அதே ஆண்டு இனிக்கும் இளமை என்ற படத்தில் நடித்துள்ளார்.

விஜயராஜ் என்ற தனது பெயரில் ராஜ் என்னும் வார்த்தையை தூக்கி காந்த் என்னும் வார்த்தையுடன் இணைத்து ‘விஜயகாந்த்’ என தனது பெயரினை மாற்றி அமைத்துள்ளார்.

தொடக்கத்தில் இவர் வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினாலும், பின்னர் நாயகனாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இவரது முன்னணி நடிப்பில் 1981 ஆம் ஆண்டு வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கென ஒரு அடையாளத்தினை பெற்று தந்துள்ளது.

பிரபலம் / அங்கீகாரம்

வில்லன் கதாபாத்திரம் மூலம் தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய இவர், நாயகனாக பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் நடிக்கும் படங்களில் தேசப்பற்று வசனங்கள் மிகவும் அழுத்தமாக இருக்கும். ஊழல், திருட்டு என சட்ட விரோத செயல்களுக்கு இவரின் குரல் திரைப்படங்களிலும், சமூகத்திலும் தொடர்ச்சியாக ஒலிக்கும்.

விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் ஊழலுக்கு எதிரான திரைக்கதையிழும், தேசப்பற்று படங்களாகவும் இருக்கின்றது. இவர் இரட்டை கதாபாத்திரங்கள் மற்றும் காவலர், ராணுவம் போன்ற கதாபாத்திரங்களில் பெரும்பாலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘புரட்சி கலைஞர்’ என்ற பட்டம் பெற்றிருந்தாலும் இவரை தமிழ் திரைப்பட ரசிகர்கள் ‘கேப்டன்’ என்றே அழைக்கின்றனர். இவரது 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்திற்கு பின்னர் இவருக்கு இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இவரது நடிப்பையும், நாட்டு பற்றையும் பாராட்டி – தமிழக அரசு திரு. விஜயகாந்த் அவர்களுக்கு கலைமாமணி விருது (2001), எம் ஜி ஆர் விருது (1994), சிறந்த தமிழ் திரை நட்சத்திரத்திற்கான பிலிம்பேர் விருது (2009) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசால் ‘சிறந்த குடிமகனுக்கான’ விருது அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகாந்த் அவர்கள் தமிழ் திரைப்படங்களில் நடிகனாக மட்டுமில்லாமல், தமிழக திரைப்பட சங்கம் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். பல கோடிகள் கடனில் உள்ள தமிழ் திரைப்பட சங்கத்தினை தனது சிறந்த வழிகாட்டுதலில் ஒரு முன்னணி திரைப்பட சங்கமாக உயர்த்தியுள்ளார்.

அரசியல் பயணம்

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் தனது தேசப்பற்று வசனங்கள் மூலம் பிரபலமான இவர், அரசியலிலும் தனது பங்களிப்பினை கொடுத்துள்ளார். “தேசிய முற்போக்கு திராவிட கழகம்” என்ற பெயரில் தனக்கென ஒரு கட்சியினை தொடங்கி புகழ் பெற்றுள்ளார். இவர் 2006 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

Latest news

இளவரசி கேட்டின் புற்றுநோய் நிலை குறித்து வெளியான சிறப்பு அறிக்கை

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயில் இருந்து குணமடைந்து வருவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருப்பதாக அவர் அறிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில்...

Australia Day-யில் முக்கிய நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

அவுஸ்திரேலியர்கள் மத்தியில் விசேட கவனத்தை ஈர்த்துள்ள அவுஸ்திரேலியா தினத்தன்று (ஜனவரி 26) அந்நாட்டின் முக்கிய நகரங்களில் நிலவும் வானிலை தொடர்பான முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம்...

எலோன் மஸ்கை எச்சரித்துள்ள பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்

உலகின் நம்பர் ஒன் பணக்காரராகக் கருதப்படும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், எதிர்வரும் ஆஸ்திரேலிய கூட்டாட்சித் தேர்தலில் தலையிட வேண்டாம் என பிரதமர் ஆண்டனி அல்பானீஸ்...

தரத்தில் சிறந்து விளங்கும் விக்டோரியா கல்வித்துறை!

சர்வதேச மாணவர் சமூகம் விக்டோரியாவில் உள்ள பள்ளி அமைப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் தரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம்...

தரத்தில் சிறந்து விளங்கும் விக்டோரியா கல்வித்துறை!

சர்வதேச மாணவர் சமூகம் விக்டோரியாவில் உள்ள பள்ளி அமைப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் தரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம்...

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் குறைக்கப்படும் கட்டணங்கள்

ஆஸ்திரேலிய கடன் வாங்குபவர்கள் பெப்ரவரி தொடக்கத்தில் வட்டி விகிதக் குறைப்பை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே இந்த குறைப்புகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Castor's...