Sportsபுதிய சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்

புதிய சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்க்

-

அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்திச் சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் (2 மற்றும் 3) வீழ்த்திய ஸ்டார்க், 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 2ஆவது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார்.

651 விக்கெட்டுகள் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 4ஆவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வார்னே 1001 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்திலுள்ளார்.

சர்வதேச போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு, 28 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட் பெற்றதாகும். 23 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இவர், இரண்டு முறை 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 50 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாககும். டெஸ்ட் போட்டியில் 14 முறை ஐந்து விக்கெட், இரண்டு முறை 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 28 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். 9 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

டட்டனின் $750 மில்லியன் திட்டத்திற்கு அல்பானீஸின் பதில்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் தனது அரசியல் களத்தில் குற்றம் தொடர்பான தலைப்பைக் கொண்டு வந்துள்ளார். முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் மீதமுள்ள நிலையில், குற்றங்களை...

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...