இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பல தரப்பினருடன் யோசனைகளை பரிமாறிக் கொள்ளவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் முர்ரே வாட் தெரிவித்துள்ளார்.
வானிலை எதிர்பாராத விதமாக மாறிவிட்டது.
அதே நேரத்தில் எச்சரிக்கை அமைப்புகளையும் மாற்ற வேண்டும் என்பது அமைச்சரின் கருத்து.
குயின்ஸ்லாந்து மற்றும் பல பகுதிகளில் ஏற்படும் இயற்கை பேரழிவுகள் தொடர்பான துல்லியமான முன்னறிவிப்புகளை வழங்க வானிலை ஆய்வு மையம் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அவதானம் செலுத்தும் அமைச்சர், எதிர்காலத்தில் துல்லியமான தரவுகளை வழங்கும் முறைமையொன்றை அமைக்க வேண்டும் என தெரிவிக்கின்றார்.
சுற்றுச்சூழல் தரவுகளை கணிப்புகளாக மாற்றும் செயல்முறை அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அதற்கு பல தரப்பினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கருத்தாகும்.
இதன்படி, அடுத்த வருடத்திற்குள் மிகவும் துல்லியமான தரவு வழங்கல் முறைமை மற்றும் செய்தி விநியோக முறைமை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் மக்களுக்கு உறுதியளிக்கிறார்.