விக்டோரியாவின் சவுத் கிப்ஸ்லேண்டில் மணிக்கு 80 கிமீ வேக வரம்பு மண்டலத்தில் 213 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதற்காக வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
49 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அதிவேகமாக ஆடம்பர BMW காரை ஓட்டியதற்காக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
சந்தேக நபரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ஸ்தலத்திலேயே இரத்துச் செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த கார் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுபவர்களை சோதனையிட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.