ஜப்பானின் டோக்கியோ நகரில் ஹானெடா விமான நிலையத்தில் தரையிரங்கிய விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
367 பேருடன் JAL 516 என்ற விமானம் ஷின் சிடோசே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஹானெடா விமான நிலையத்தில் தரையிரங்கிய போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தீயை கட்டுபடுத்து பயணிகளை மீட்கும் பணிகளில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
டோக்கியோ விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடலோர காவல்படை விமானத்தின் மீது மற்றுமொரு விமானம் மோதி தீப்பிடித்து எரிந்தது.
இந்நிலையில் தீப்பிடித்த விமானத்தில் பயணித்த 379 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், 5 கடலோர காவல்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு கடலோர காவல்படை தளபதி உட்பட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் 17 பயணிகளுகம் காயமடைந்துள்ளனர்.