மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் Taylor Swift-ன் வரவிருக்கும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் மோசடி குறித்து ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் இசை நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த இசை நிகழ்ச்சிக்கான 1000 டிக்கெட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி 370 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட வேண்டிய டிக்கெட்டுகள் 2000 டொலர்களுக்கு மேல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டிக்கெட்டுகளை மோசடியாக விற்ற பலரை மெல்போர்ன் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.