Sportsஅவுஸ்திரேலியாவில் 'பிங்க்' டெஸ்ட் போட்டி

அவுஸ்திரேலியாவில் ‘பிங்க்’ டெஸ்ட் போட்டி

-

பாகிஸ்தான்,அவுஸ்திரேலியா ஆகியவற்றுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை சிட்னியில் நடைபெற உள்ளது.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆண்டின் முதல் டெஸ்ட் போட்டி ‘பிங்க் டெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது.

போட்டியின் போது மைதானத்தைச் சுற்றியுள்ள தடுப்புகள் மற்றும் அடையாளங்கள், நடுவில் உள்ள விக்கெட்கள் உட்பட அனைத்தும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதோடு அவுஸ்திரேலிய வீரர்கள் பிங்க் தொப்பி அணிந்திருப்பார்கள்.

மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதே பிங்க் டெஸ்டின் நோக்கமாகும். முன்னாள் அவுஸ்திரேலிய வீரர் கிளென் மெக்ராத்தின் மனைவி ஜேன் புற்று நோயால் மரணமானார். 2005 இல் மெக்ராத் தனது மனைவிக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு மெக்ராத் அறக்கட்டளையைத் தொடங்கினார்.

இந்த அறக்கட்டளை கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோயாளிகள் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்காக நிதி சேகரிப்பதும் இதன் நோக்கமாகும்.

நன்றி தமிழன்

Latest news

தரத்தில் சிறந்து விளங்கும் விக்டோரியா கல்வித்துறை!

சர்வதேச மாணவர் சமூகம் விக்டோரியாவில் உள்ள பள்ளி அமைப்பை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாநில பள்ளிக்கல்வித்துறையில் இருக்கும் தரம் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம்...

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் குறைக்கப்படும் கட்டணங்கள்

ஆஸ்திரேலிய கடன் வாங்குபவர்கள் பெப்ரவரி தொடக்கத்தில் வட்டி விகிதக் குறைப்பை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே இந்த குறைப்புகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Castor's...

Online Visa மோசடிகள் பற்றி உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி

ஆஸ்திரேலியர்கள் ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு உள்துறை அமைச்சகம் தொடர் சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமன்றி, அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...

ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் வரவுள்ள பிரபல அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் துரித உணவு நிறுவனமான Wendy’s தனது முதல் கடையை ஆஸ்திரேலியாவில் நாளை திறக்க உள்ளது. 2034க்குள் 200 Wendy’s கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 இல்...

சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்படும் சிட்னி கடற்கரைகள்

சிட்னியில் உள்ள ஒன்பது கடற்கரைகளை வரும் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்கு மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது கரையில் கரையொதுங்கிய ஒரு சிறிய வெள்ளை மற்றும் சாம்பல்...

ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் வரவுள்ள பிரபல அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் துரித உணவு நிறுவனமான Wendy’s தனது முதல் கடையை ஆஸ்திரேலியாவில் நாளை திறக்க உள்ளது. 2034க்குள் 200 Wendy’s கடைகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 இல்...