பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களுக்கு பல வாழ்க்கைச் செலவு நிவாரணங்களை பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், புதிய ஆண்டில் பணவீக்கத்தைக் குறைப்பதற்கு அதிக முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.
மே மாதம் அறிவிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் தேவையான நிவாரண திட்டங்களை சமர்ப்பிக்குமாறு திறைசேரி மற்றும் நிதி நிறுவனங்களை அந்தோனி அல்பானீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர் சந்தையில் பற்றாக்குறை, விநியோகச் சங்கிலியில் உள்ள வரம்புகள் உள்ளிட்ட நீண்ட கால பிரச்னைகளுக்கு இந்த ஆண்டு பட்ஜெட் அதிக கவனம் செலுத்தப் போகிறது.
அதற்கான கொள்கை தீர்வுகள் அறிவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
இது தவிர எரிசக்தி உள்ளிட்ட கட்டணச் சலுகைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.