பிரபல கார்ட்டூன் கதாபாத்திரமான, ‘Mickey Mouse’ சம்பந்தமான, ‘Disney’ நிறுவனத்தின் 95 ஆண்டு கால காப்புரிமை காலாவதியாகியுள்ளது. இதனால் தற்போது Mickey Mouse கதாபாத்திரத்தின் பொது பயன்பாட்டுக்கான தடை நீங்கியுள்ளது.
கடந்த 1928ம் ஆண்டு, ‘Steamboat Willie’ என்னும் குறும்படம் வாயிலாக, Mickey Mouse கதாபாத்திரம் அமெரிக்காவைச் சேர்ந்த, ‘Disney’ நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்க சட்டத்தின் படி, 95 ஆண்டுகள் வரை காப்புரிமை செல்லுபடியாகும்.
இதன் அடிப்படையில், குறிப்பிட்ட இந்த படத்தில் உள்ள Mickey Mouse-ன் கதாபாத்திரத்துக்கான Disney-யின் காப்புரிமை, கடந்தாண்டு இறுதியுடன் காலாவதியாகியுள்ளது.
இந்த மாதம் முதல், Mickey Mouse கதாபாத்திரத்தின் பொதுப் பயன்பாட்டுக்கு எந்த வித தடையும் கிடையாது. இதற்கு Disney இனி உரிமை கோர முடியாது.
எனினும் Mickey Mouse கதாபாத்திரத்தின் பயன்பாட்டுக்கு முழுவதுமாக தடை நீங்கவில்லை. ‘Steamboat Willie’ குறும்படத்தில் இடம்பெற்ற ‘Captain Mickey’ கதாபாத்திரத்தைத் தவிர, மற்ற அனைத்து Mickey Mouse கதாபாத்திரங்களின் காப்புரிமையும், Disney வசமே இன்னும் உள்ளது.
நன்றி தமிழன்