அவுஸ்திரேலியாவில் 38 வீதமானவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கடனில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
ஃபைண்டர் மனியின் நிபுணரான டெய்லர் பிளாக்பர்ன், இது ஒரு விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் என்று கூறினார்.
அங்கு வாடிக்கையாளர்களின் செலவு முறை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கிறிஸ்மஸை கிரெடிட் கார்டுகளில் கழித்த பலர் கடனை அடைக்க சுமார் 12 மாதங்கள் ஆகும் என்று கூறினார்கள்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியே இந்த நிலைக்கு காரணம் என பிளாக்பர்ன் சுட்டிக்காட்டியுள்ளார்.