Newsஅகதிகள் பிரச்சனையை தீர்க்க பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும்

அகதிகள் பிரச்சனையை தீர்க்க பில்லியன் கணக்கான டொலர்கள் செலவாகும்

-

அகதிகள் பிரச்சனையை தீர்க்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பில்லியன் கணக்கான டொலர்களை செலவிட வேண்டியிருக்கும் என நம்பப்படுகிறது.

சமீபத்திய தரவுகளின்படி, மாதந்தோறும் சுமார் இரண்டாயிரம் பேர் விமானங்கள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக நுழைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவதானம் செலுத்தும் குடிவரவுத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரி அப்துல் ரிஸ்வி, நிலைமையைக் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் தீவிரமான தலையீடு தேவை என்று கூறுகிறார்.

அகதிகள் தொடர்பான புதிய நடைமுறைகளைத் தயாரிப்பதற்காக அரசாங்கம் 160 மில்லியன் டொலர்களை ஒதுக்கிய போதிலும் அது போதுமானதாக இல்லை என்பது முன்னாள் அதிகாரியின் கருத்து.

விசா வழங்குதல் மற்றும் புகலிடக் கோரிக்கைகளை விசாரிப்பது முறைப்படுத்தப்பட்டு விரைவுபடுத்தப்பட வேண்டும் எனவும் கொள்கைப் பிரச்சினைகள் திருத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், புகலிடக் கோரிக்கையாளர்கள் பலர் நாட்டிற்குள் பொய்யாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்குள் நுழையும் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளில் குழப்பமோ அல்லது மோதலோ இல்லை என்பதை தரவு உறுதிப்படுத்துகிறது.

எனவே அவர்களை அகதிகளாக நடத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னைய கூட்டு அரசாங்கத்தின் கவனக்குறைவு காரணமாக அகதிகள் பிரச்சினை அதிகரித்துள்ளதாக குடிவரவு அமைச்சர் அன்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கம் நடைமுறைகளை பின்பற்றத் தவறியமையும் விசா நடைமுறையில் உள்ள பலவீனமே தற்போதைய நிலைமைக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...