ஆஸ்திரேலியாவின் முதல் பணமில்லா பேக்கரி பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் மில்டனில் அமைந்துள்ள இந்த பேக்கரிக்கு ஹெரிடேஜ் பேக்கரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் திறமையான சேவையை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
குறிப்பாக, பேக்கரியின் உரிமையாளர் தனது பேக்கரி இரவில் திறந்திருப்பதால், பணமில்லா பரிவர்த்தனை மூலம் தனது ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்டார்.
இணையப் பரிவர்த்தனைகள் மற்றும் அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தலாம் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் பரிவர்த்தனைகளை முறையாக மேற்கொள்ளலாம்.
பணமில்லா பேக்கரியை பலரும் சமூக வலைதளங்கள் மூலம் விமர்சித்து வருகின்றனர்.
இவ்வாறான வர்த்தகங்களை எதிர்கொள்ளும் வகையில் எதிர்காலத்தில் நாணயத்தாள்களின் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.