Newsவாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ள காஸா

வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ள காஸா

-

ஐக்கிய நாடுகள் அவையின் மனிதநேய தலைவர், காஸா- வாழத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளதாகவும் பொது சுகாதார பேரழிவு உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மார்டின் கிரிஃபித்ஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தாவது:

பலஸ்தீனர்கள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் இதுவரை எங்குமே பதிவு செய்யப்படாத பஞ்சத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வாழ்வதற்காக ஒவ்வொரு நாளும் இத்தனை இடர்களைச் சந்தித்து வருகின்றனர். உலகம் அதனை பார்த்து கொண்டிருக்கிறது.

ஐ.நா மனிதத்துவ விவகார பிரிவின் தலைவர், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேர் பலியாவது குறித்தும் திறந்தவெளியில் மாறுபாடுகளுடனான வெப்பநிலையில் மக்கள் தங்கியிருப்பது குறித்தும் தனது கவலையை வெளிபடுத்தியுள்ளார்.

குறைவான வைத்தியசாலைகளே செயல்பாட்டில் உள்ளன. தொற்று நோய்கள் பரவியுள்ளதுடன், மருந்து பொருட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கிடையில் 180 குழந்தைகள் புதிதாகப் பிறக்கின்றன என்பதைக் குறிப்பிட்ட அவர், ஐ.நா உடனடி போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கான நேரம் இது என வலியுறுத்தியுள்ளார்.

மனிதத்துவத்தின் மிக மோசமான நிலையை காஸா சந்தித்து வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest news

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

முக அங்கீகார தொழில்நுட்பத்தை அகற்றும் Kmart

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FRT) அகற்ற Kmart முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி முக அங்கீகார தொழில்நுட்பத்தை...

Meta தயாரித்த விசித்திரமான கண்ணாடிகள்

Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட்டார். கண்ணாடிகள் நிறுவனமான Ray-Ban-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...