விக்டோரியாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாலை வேளையில் இந்த நிலை உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை தரவு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரவு முதல் இருநூறு மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் என நம்பப்படுகிறது.
இதன்படி, விக்டோரியா மாகாண மக்கள் காலநிலை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் நேற்று மணல் மூட்டைகள் சேகரிக்கும் பணி தொடங்கியது.
திடீர் வெள்ள அபாயத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விக்டோரியா மாநில அவசர சேவைகள் தலைமை அதிகாரி டிம் வைபுஷ் தெரிவித்துள்ளார்.
அவசரநிலையை சமாளிக்க விக்டோரியா அவசர சேவை தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.