மெல்போர்னில் நாஜி படைகளுக்கு சொந்தமான பல பழங்கால பொருட்கள் மற்றும் கலைப்பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளன.
மவுண்ட் ஈவ்லின் ஓல்டீஸ் கலெக்டபிள்ஸ் மூலம் ஆன்லைன் ஏலத்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானிய வீரர்கள் பயன்படுத்திய சீருடைகள், கை பட்டைகள் போன்ற பழங்கால பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.
அதில் ஒரு சீருடை 9000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு விற்கப்பட்டுள்ளது.
சுமார் 130 வாங்குபவர்கள் ஆன்லைனில் ஏலத்தில் சேர்ந்தனர்.
ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, நாஜி சின்னங்கள் அல்லது தொடர்புடைய பொருட்களை விற்பவர்களுக்கு 12 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த சட்டம் இன்று முதல் அமுலுக்கு வரும் எனவும், சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னரே ஏலம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.