பணவீக்கத்தை ஏதோ ஒரு வகையில் கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால், மக்கள் மீது அழுத்தமாக இருந்து வரும் பணவீக்கத்தைக் குறைப்பது, அரசாங்கம் கவனம் செலுத்தும் முக்கியப் பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவம்பர் மாதத்திற்கான பணவீக்க அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடப்பட உள்ளது.
எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்த முடியும் என திறைசேரி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022 தேர்தலுக்கு முந்தைய காலாண்டில் பணவீக்கம் உச்சத்தில் இருந்ததாகவும் தற்போது படிப்படியாக குறைந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த குறைப்பை தொடர்வது அரசாங்கத்திற்கு சவாலாக உள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.