பாதுகாப்புப் படைகளில் வெளிநாட்டினரை சேர்க்கும் முடிவைப் பற்றி பிரதமர் அந்தோனி அல்பானீஸ் எப்படி அறியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவுஸ்திரேலியா வரலாற்றில் முதன்முறையாக வெளிநாட்டினரை பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதமரிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது, பாதுகாப்பு படை உறுப்பினர்களை சேர்ப்பது பாதுகாப்பு அமைச்சின் வேலையாகும்.
நட்பு நாடுகளுடனான தொடர்பை அதிகரிப்பதே அரசாங்கத்தின் கொள்கை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் வெளிநாட்டினரை பணியமர்த்துவது குறித்து தாம் நேரடியாக அறிக்கை விடவில்லை என பீட்டர் டட்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.