வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மற்றும் விக்டோரியா மக்களுக்கு மேலும் நிவாரணப் பொதிகள் வழங்கப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில், ஆஸ்திரேலியர்கள் சூறாவளி, வெள்ளம் மற்றும் காட்டுத் தீ போன்ற பல இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைப்பது மட்டுமல்லாமல், அந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறனையும் உயர்த்த வேண்டும் என்று அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தினார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், விஞ்ஞான ரீதியாகவும், காலநிலை மாற்றம் ரீதியாகவும் வெள்ள நிலைமை ஒரு எச்சரிக்கை என குறிப்பிட்டுள்ளார்.