CinemaNetflix தளத்தில் நீக்கப்பட்ட நயன்தாராவின் அன்னபூரணி.

Netflix தளத்தில் நீக்கப்பட்ட நயன்தாராவின் அன்னபூரணி.

-

நயன்தாரா நடிப்பில் உருவான அன்னபூரணி திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் திகதி வெளியானது. இந்த படத்தை ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா எனப் பல பிரபலங்கள் நடித்து உள்ளனர்.

சமீபத்தில் ரமேஷ்சோலங்கி என்பவர், அன்னபூரணி படத்தில் மத உணர்வைப் புண்படுத்துவதாகவும், லவ்ஜிகாத்தை ஆதரிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.

இந்த மாதிரியான படங்களை வெளியிட்டு வரும் Netflix தளத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் அன்னபூரணி திரைப்படத்தை Netflix OTT தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கப்படும் மதுபானம் மீதான வரிகள்

ஆஸ்திரேலியாவில் இன்று முதல் மதுபானங்கள் மற்றும் முன் கலந்த பானங்களின் விலைகள் அதிகரித்துள்ளன. ஏனென்றால், பணவீக்கத்திற்கு ஏற்ப அரசாங்கம் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் மதுபான வரியை அதிகரிக்கிறது...

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை – 1200 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் நிலவும் பனியுடன் கூடிய வானிலை காரணமாக சுமார் 1200 விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் மின்சாரம் இல்லாமல் தவித்ததாகவும் Bloomberg செய்தி...

இன்று முதல் Economy வகுப்பு பயணிகளுக்கு பல சலுகைகளை வழங்கும் Qantas

Qantas நிறுவனம் இன்று முதல் புதிய Economy Plus திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் Qantas Economy வகுப்பில் பயணிக்கும் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Economy Plus திட்டம் பயணிகளுக்கு...

ஜப்பானில் ski lift-இல் சிக்கி ஆஸ்திரேலிய பெண் உயிரிழப்பு

ஜப்பானின் நாகானோ மாகாணத்தில் உள்ள ஒரு பிரபலமான ski ரிசார்ட்டில் ski lift-இல் சிக்கி 22 வயது ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். "பையில் இணைக்கப்பட்டிருந்த இடுப்புப்...

Logan பகுதியில் பல வாகனங்கள் மோதி விபத்து

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தின் Grater Brisbane பகுதியில் உள்ள Logan நகருக்கு அருகில் பல வாகனங்கள் மோதிக்கொண்டதால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Loganholme பசிபிக் மோட்டார்வேயில்...

கடுமையான வெப்பம் காரணமாக ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு

பெர்த்தின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை நெருங்கி வருவதால், பல இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Scarborough, Trigg, Doubleview,...