தந்தையின் கார் மோதியதில் ஒன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிட்னியின் துங்காபி பகுதியில் வசித்து வந்த மகள் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் தந்தை தனது காரை வீட்டின் முன் திருப்பும்போது சிறுமி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
தந்தை வீட்டை விட்டு வெளியேறிய போது குழந்தையும் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ள நிலையில் அவர் அருகில் குழந்தையை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது சிறுமி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான விபத்துகளினால் வருடாந்தம் 4 வயதுக்குட்பட்ட 8 சிறுவர்கள் இறப்பதாகவும் கிட்டத்தட்ட 60 சிறுவர்கள் காயமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.