Sportsசிட்னி மைதானத்திற்கு ஹெலியில் வந்திறங்கிய டேவிட் வோர்னர்

சிட்னி மைதானத்திற்கு ஹெலியில் வந்திறங்கிய டேவிட் வோர்னர்

-

டேவிட் வோனர் ஹெலிகொப்டரில் சிட்னி கிரிக்கெட் மைதானத்திற்கு வந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் தற்போது 2024 ஆடவர் பிக்பேஷ் தொடர் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. அதில் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக டேவிட் வோர்னர் விளையாடி வருகிறார்.

அத்தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக ஹண்டர் பள்ளத்தாக்கில் உள்ள தன்னுடைய சகோதரர் திருமணத்திற்கு டேவிட் வோர்னர் சென்றார்.

அந்த விழாவுக்கு சென்ற வோர்னர் மாலை 5 மணிக்குள் முதல் போட்டி நடைபெறும் சிட்னி மைதானத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

அதனால் திருமணத்தை முடித்துக் கொண்டு உடனடியாக ஒரு ஹெலிகொப்டரை வாடகைக்கு எடுத்த வோர்னர் அங்கிருந்து பறந்து தாம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி விடைபெற்ற சிட்னி மைதானத்தில் இறங்கினார்.

அவர் தரை இறங்கியது அங்கிருந்த செய்தியாளர்கள் மற்றும் இதர வீரர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Latest news

குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு அவசர தடை

தெற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் மொபைல் போன்களுக்கு விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. விக்டோரியாவில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர்...

ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சுயதொழில் செய்பவர்களுக்கு நிவாரணம்

ஆஸ்திரேலியாவில் உள்ள மில்லியன் கணக்கான சுயதொழில் செய்பவர்களுக்கு பயனளிக்கும் வகையில், Westpac வங்கி அதன் கடன் விதிகளை மாற்றத் தயாராகி வருகிறது. நிதி விஷயங்களில் கடன் வழங்குபவர்களுக்கு...

ஒற்றைத் தலைவலி வலியைக் குறைக்க பயன்படும் நீரிழிவு நோய் சிகிச்சை

நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் Ozempic என்ற மருந்தை, நீண்டகால ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையாகப் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இத்தாலியில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், type...

சூரிய மண்டலத்தின் வழியாக பயணிக்கும் ஒரு புதிய நட்சத்திரம்

சூரிய குடும்பத்தின் வழியாக செல்லும் ஒரு புதிய விண்மீன்களுக்கு இடையேயான பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நட்சத்திரப் பொருள் சூரிய மண்டலத்தைச் சேர்ந்தது அல்ல என்றும், அது...