மெல்போர்னில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
வடக்கு மெல்போர்னில் உள்ள மேகர் பவுல்வார்டில் உள்ள மறுசுழற்சி ஆலையில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் சுமார் இருபத்தைந்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கு தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது தொழிற்சாலையில் யாரும் இல்லை எனவும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.