News8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் தடம் பதிப்போம் - எலான் மஸ்க்

8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் தடம் பதிப்போம் – எலான் மஸ்க்

-

எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் நிலவுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் வகையில், உலகின் மிகப்பெரிய ரொக்கெட்டை தயாரித்துள்ளது. 33 என்ஜின்கள் பொருத்தப்பட்ட இந்த ரொக்கெட்டுக்கு ‘ஸ்டார்ஷிப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த ரொக்கெட் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதற்கட்ட சோதனையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெடித்து சிதறியது.

பின்னர் தவறுகள் சரிசெய்யப்பட்டு நவம்பர் மாதம் மீண்டும் சோதனை செய்யப்பட்ட போது விண்கலம் தனியாக பிரிந்தபிறகு, பூஸ்டர் வெடித்து சிதறியது.

இதையடுத்து தவறுகள் சரி செய்யப்பட்டு, மூன்றாவது சோதனையை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய எலான் மஸ்க், மூன்றாவது ஸ்டார்ஷிப் சோதனை வெற்றிகரமாக அமையும் என்றார்.

மேலும், தனது நிறுவனம் அடுத்த 8 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கிரகத்தில் ஸ்டார்ஷிப் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கும் என்றும், மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்குவதற்கு நிறைய வேலைகள் செய்யவேண்டியிருக்கும் எனவும் அவர் கூறினார்.

Latest news

லாஸ் ஏஞ்சல்ஸ் பேரிடர் மேலாண்மைக்கு உதவ தயாராக உள்ள ஆஸ்திரேலியா

லாஸ் ஏஞ்சல்ஸைப் பாதித்துள்ள கடுமையான மற்றும் பேரழிவுகரமான காட்டுத்தீக்கு மத்தியில் அமெரிக்காவுக்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அமெரிக்காவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த உதவத்...

ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என விமர்சித்த எலான் மஸ்க்

கனடாவின் இடைக்கால பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை பெண் என்று குறிப்பிட்டு எலான் மஸ்க் விமர்சித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கும் யோசனையை டொனால்ட் டிரம்ப் தீவிரமாக...

விமானத்தில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இலங்கையர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற தடை

டிசெம்பர் 18ஆம் திகதி இலங்கையிலிருந்து மெல்பேர்ன் நோக்கி பயணித்த சர்வதேச விமானத்தில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கையர்களுக்கு மெல்பேர்ன் நீதிமன்றம்...

விக்டோரிய இளைஞர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி

விக்டோரியாவில் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் புதிய ஓட்டுநர்களுக்கு இலவச ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் புதிய திட்டத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. My Learners Free Lesson...

மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட 13 நாட்களாக காணாமல் போன ஆஸ்திரேலிய இளைஞர்

நியூ சவுத் வேல்ஸில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக காணாமல் போன மலையேறுபவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஸ்னோவி மலைப் பகுதியில் உள்ள கோஸ்கியுஸ்கோ...

2030-இல் மாற்றமடையும் அதிக தேவையுடைய வேலைத் துறைகள்

2030ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் அதிக தேவையுடைய வேலைத் துறைகள் மாறும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, 2030 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் டெலிவரி டிரைவர்கள்,...