ஜப்பானின் மிகப்பெரிய விமான நிறுவனமான ஆல் நிப்பான் ஏர்வேஸின் (ஏஎன்ஏ) பயணிகள் விமானம் சப்போரோவில் இருந்து டோயாமாவுக்கு கடந்த 13ம் திகதி காலை 11.20 மணிக்கு பறந்து கொண்டிருந்த போது விமானி அறையில் இருந்த ஜன்னலில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சப்போரோ நியூ சிட்டோஸ் விமான நிலையத்தில் மதியம் 12.10 மணியளவில் தரையிறக்கப்பட்டது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதுடன், விமானத்தில் பயணித்த 63 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளனர்.
நன்றி தமிழன்