செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பான சட்டங்களை உருவாக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் விசேட ஆலோசனைக் குழுவொன்று அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவை பொறுப்புடனும் சரியாகவும் பயன்படுத்த மக்களை வழிநடத்துவதே அரசின் நோக்கம்.
இதனால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, செயற்கை நுண்ணறிவைச் சரியாகப் பயன்படுத்தக் கூடிய சட்டப் பின்னணியை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு அடுத்த தசாப்தத்தில் பொருளாதாரத்தில் சுமார் நான்கு டிரில்லியன் டாலர்களை சேர்க்கும் என்றும் அரசாங்கம் நம்புகிறது.