Cinemaஅட்லி தயாரிப்பில் ஹிந்தியில் தயாராகிவரும் "தெறி" திரைப்படம்

அட்லி தயாரிப்பில் ஹிந்தியில் தயாராகிவரும் “தெறி” திரைப்படம்

-

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைப்படத்தில் சமந்தா, ராதிகா சரத்குமார், எமி ஜாக்சன், மனோபாலா, டைரக்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகவும் அதில் விஜய் கதாபாத்திரத்தில் வருண் தவான் நடிப்பதாகவும் பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி காளீஸ் இயக்கும் இப்படத்தில் வருண் தவண், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தை அட்லீ தயாரிக்க உள்ளார்.

இன்று இப்படத்திற்கான பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இந்த பூஜையில் அட்லீ, பிரியா அட்லீ, வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் கலந்து கொண்டனர். இதுகுறித்த விடியோவை அட்லி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...